அனுமன் பெருமை: சுந்தரகாண்டம் (Sundarakandam) படித்தால் வேண்டுதல்கள் யாவும் ஈடேறும் என்பர். ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் அதை காண்டங்களாகப் பிரித்தார். அப்போது அவருக்கு ராமாயணத்தில் அரும்பெரும் செயல்கள் புரிந்த அனுமனுக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் எனத் தோன்றியது. எனவே ஏழுக்காண்டங்களுள் ஒன்றினை அனுமனின் பெயரால் சுந்தர காண்டம் என்று அமைத்து மகிழ்ந்தார். அனுமன் சொல்லின் செல்வன் என்பதற்கு எடுத்துக்காட்டாக சில காட்சி வசனங்களை அமைத்தார் கம்பர். அனுமன் முதன் முதலில் ராமனை சந்தித்த போது ராமபிரான் அவரிடம் நீ யார்? என்று கேட்டார்.
ராமனின் வினாவுக்கு, காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்று தன்பெயருக்கு தன் பெற்றோர் யார் என்பதையும் சேர்த்து அடக்கமாக கூறினார். அனுமன் சீதையை தேடி இலங்கைக்குச் சென்றபோது அசோகவனத்தில் சீதை தற்கொலைக்கு முயற்சிப்பதைக் கண்டார். ஒரு நொடி தாமதித்தாலும் சீதை உயிர் நீத்துவிடுவாள் எனும் நிலை. அவளை என்ன சொல்லித் தடுப்பது? சட்டென்று ஜெய் ஸ்ரீராம் என்று சீதை காதுபட உரக்கக் கூறினார். ராம நாமம் கேட்பதும் அப்படியே நின்றாள் சீதை.
சீதா தேவியிடம் தாயே! நான் ராமபக்தன் என் பிரபு ஸ்ரீராமன் தங்களை விரைவில் சிறை மீட்டுச் செல்வார்….! என்றும் ஆறுதல் சொல்லி தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினார். இலங்கையில் இருந்து திரும்பி வந்த அனுமன், ராமபிரானிடம், கண்டனென் கற்பினும் கணியை கண்களால் என்று ஒரே வரியில் சிதையைக் கண்டதையும் அவர் கற்புக்கரசியாக திகழ்வதையும் கூறினார். வால்மீகியும், கம்பனும் மட்டுமல்ல; இன்றும் கூட ராமாயணத்தினை யார், எந்த மொழியில் எழுதினாலும் எல்லோராலும் போற்றப்படுவராக இருப்பதே அனுமனின் பெருமை எனலாம்.
சிரமம் நீக்கும் சுந்தரகாண்டம்: இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம். அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது. ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன்; மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம். ராமா என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன். ராமா என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம். ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன். அனுமன் மற்றும் சுந்தரகாண்டம் ஆகிய ரத்தினங்களின் மதிப்பை அறிந்தவர்கள் அதை நழுவ விட மாட்டார்கள். இம்மண்ணுலகில் வாழும் மனிதர்களால், கோடிக்கணக்கில் உள்ள ஸ்லோகங்களைப் படித்து ராமாயணத்தை அறிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்த வால்மீகி முனிவர் அதை இருபத்துநான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட சிறு காவியமாக உருவாக்கினார். இந்த பாரத நாடெங்கும் வால்மீகி ராமாயணத்துக்கு, எல்லையில்லாத பெருமையும் மதிப்பும் இருந்து வருகிறது. வேறு எந்தவொரு காவியத்துக்கும் இத்தனை பெருமை இருந்ததில்லை…
அனுமன் சன்னிதிகளில் செந்தூரம் தருவது ஏன்?
அனுமனை வழிபடக் கூடிய அனைத்து ஆலயங்களிலும் செந்தூரம் வழங்குவதைப் பார்க்கலாம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
அனுமனை வழிபடக் கூடிய அனைத்து ஆலயங்களிலும் செந்தூரப் பொட்டு வழங்குவதைப் பார்க்கலாம். இந்த செந்தூரப் பொட்டு எதற்காக வழங்கப்படுகிறது என்பதற்கு ராமாயணத்தில் ஒரு கதை இருக்கிறது.
ஒரு முறை சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரப் பொட்டு வைத்திருந்தார். அதைப் பார்த்த அனுமன், ‘தாயே! எதற்காக செந்தூரம் வைத்துள்ளீர்கள்?’ என்றார்
சீதையோ, தன் கணவரான ஸ்ரீராமர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக செந்தூரம் வைத்திருப்பதாக கூறினார்.
இதைக் கேட்ட அனுமன், உடனடியாகச் சென்று தன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டார். ராமர் நலமுடன் இருக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்குமே உண்டு. ஆனால் அந்த எண்ணம் அனுமனிடம் எல்லை கடந்ததாக இருந்தது. அதனால்தான் அவர் தன் உடல் முழுவதிலும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டார்.
இதை நினைவு கூறும் வகையில்தான் அனுமன் சன்னிதிகளில் செந்தூரம் கொடுக்கிறார்கள்…
ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்
அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது.
அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு; அன்னை சீதா அழகு; சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு;
சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்!
சுந்தரகாண்டம் என்னும் பரம ஒளஷதம்!
விதியை மாற்றுவதில் மனித குலத்திற்கே தீர்வாக இருந்து மிகவும் துணைபுரிவது தான் ஸ்ரீமத் சுந்தர காண்டம்.
இராமாயணம் மனித குலத்திற்கு கிடைத்த ஒரு பெரும் பொக்கிஷம் என்றால் அதில் ‘சுந்தரகாண்டம்’ விலைமதிப்பற்ற மாணிக்கமாகும்.
சுந்தரகாண்டத்திற்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்பு என்றால் சுந்தரகாண்டம் முழுவதும் அனுமனின் பராக்கிரமத்தை விளக்குவதாகும். அனுமன் பிரவேசித்த பின்னர் தான் இராமாயணத்தின் போக்கிலேயே ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். இராமருக்கும் சரி…. அன்னை சீதா தேவிக்கும் சரி நல்ல செய்திகள் கிடைக்க துவங்கும்.
ராமநாமம் ஒன்றையே சதா ஜெபிப்பவன் அனுமன். ‘ராமா’ என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம்.
சீதையின் திருவாக்கால் சிரஞ்சீவி பட்டம்பெற்ற ஆஞ்சநேயன். எந்த யுகத்திலும் ஜீவிக்கக்கூடிய ராமபக்தன். அவரின் ராம பக்தி அளவிட முடியாதது. இவ்வாறாக அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் பெருமை பற்றிக் கூறுகிறது சுந்தர காண்டம்.
அனுமனுடைய ஆற்றல், அறிவு, செயல்திறன், வீரம், விவேகம், வாக்கு சாதுர்யம், முயற்சி, தன்னடக்கம், ராம பக்தி போன்ற பல உயர்குணங்கள் எல்லாம் சுந்தர காண்டத்தில்தான் முழுமையாக வெளிப்படுகின்றன.
சுந்தரகாண்டம் படித்தால் தீராத பிரச்னைகளே இல்லை. சகல காரிய சித்தி, தீர்க்க முடியாத நோய்களினின்றும் விடுதலை, சுபகாரியத் தடை நீங்குதல், தனலாபம், தரித்திரம் முடிவுக்கு வந்து அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகுதல் என சுந்தரகாண்டம் தரும் பயன்கள் எண்ணற்றவை.
ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள் முதலியவற்றை தீர்க்கும் சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம் தொடர்ந்து படிப்பதால் மேற்கூறிய நன்மைகள் மட்டுமல்லாது ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள் போன்றவை கூட நீங்கும். சுந்தர காண்டத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்துக்கும், ஒவ்வொரு குறையை தீர்க்கும் சக்தி உண்டு.
சுந்தரம்= பரிபூர்ண ஆனந்தம்= காரண காரிய பரிபூர்த்தி.
No responses yet